விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி

Update: 2023-08-18 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் சித்தம்பூண்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி நடந்தது. கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது.

இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிசாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து, மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை துறை தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்