வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகள்-உடனடியாக அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.;
நெகமம்
வகுத்தம்பாளையம் பகுதியில் தடுப்பணையை ஆக்கிரமித்த புதர் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
தடுப்பணையில் புதர் செடிகள்
கிணத்துக்கடவு ஒன்றியம் தேவணாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வகுத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள குட்டையில் தண்ணீர் நிரம்பி வழிந்து செல்கிறது. வகுத்தம்பாளையம்- நெகமம் செல்லும் ரோட்டில் குட்டை அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இக்குட்டைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு குட்டை நிரம்பி வழிகிறது. இதில் இருந்து தண்ணீர் வழிந்து செல்வதற்கு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையில் இருந்து வழிந்து செல்லும் தண்ணீர் அங்குள்ள சிறிய பாலம் வழியாக செல்கிறது. தற்போது தடுப்பணையை சுற்றிலும் அதிகளவில் புதர்மண்டி தடுப்பணை இருப்பதே தெரிவதில்லை. மேலும் குட்டையையும் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது.
விபத்து அபாயம்
நெகமம்-கோவில்பாளையம் செல்லும் மெயின் ரோடு என்பதால் பஸ் போக்குவரத்தும், கனரக வாகன போக்குவரத்தும் அதிகமாக வந்து செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி குட்டையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க குட்டை அருகே இரும்பு தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முட்புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.