டெக்ஸ்டைல் நிறுவனங்கள் சார்பில் ரூ.30 லட்சம் நிதி உதவி

டெக்ஸ்டைல் நிறுவனங்கள் சார்பில் ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Update: 2023-03-17 18:56 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டமைப்பு மேம்பாட்டிற்காக டெக்ஸ்டைல் நிறுவனங்களின் சார்பில் ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் அட்லஸ் நாச்சிமுத்து, ஏசியன் அசோக் ராம்குமார், சிந்தசிஸ் சுதாகர் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் பிரபுசங்கரிடம் வழங்கினர். க.பரமத்தி, ஓலப்பாளையம், சேப்பலாப்பட்டி ஆகிய 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் நிலையம், பிரசவ அறை, பிரசவத்தின் கவனிப்பு அறை, 10 படுக்கை மற்றும் 4 கழிப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இந்த மூன்று நிறுவனங்கள் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர். இந்த தொகையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்துவதற்கு மூன்றில் ஒரு பங்கு நிதி வழங்கியுள்ளனர். இந்த நிதியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசுக்கு கருத்துருக்கு அனுப்பி கூடுதலாக ரூ.60 லட்சம் பெற்று மொத்தம் ரூ.90 லட்சத்தில் 3 ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்