பள்ளிபாளையத்தில் வாகன சோதனையில் 30 பேருக்கு அபராதம்

Update:2022-12-15 00:15 IST

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரம், செல்வராஜ், தன்ராஜ் மற்றும் ஏட்டுகள் சிவகுமார், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் 3 பிரிவாக பிரிந்து பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி மண்டபம், காவிரி ஆர்.எஸ்., பஸ் நிறுத்தம், ஓடப்பள்ளி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வந்தவர்கள், லாரிகளில் அதிகளவில் சரக்குகள் ஏற்றி வந்தது என 30 பேருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்