ரூ.1 கோடியில் உருவாகும் உணவு வீதி

ரூ.1 கோடியில் உருவாகும் உணவு வீதி;

Update:2023-08-13 00:45 IST

கோவை

கோவை வ.உ.சி. பூங்கா அருகே தரமான உணவுகளை வழங்க ரூ.1 கோடியில் உணவு வீதி அமைக்கப்படுகிறது.

உணவு வீதி

மத்திய சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் 4 இடங்களில் தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க, உணவு வீதி அமைக்கப்படுகிறது. கோவை வ.உ.சி. மைதானம், சென்னை எலியட்ஸ் கடற்கரை, வேளாங்கண்ணி, மாமல்லபுரம் ஆகிய 4 இடங்களில் தலா ரூ.1 கோடியில் இந்த உணவு வீதி அமைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.4 கோடி தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

கோவை வ.உ..சி. மைதானம் மற்றும் பூங்கா பகுதியில் உள்ள பக்க சாலைகளில் உணவுக்கடைகள் அமைக்கப்பட்டு உணவு வீதி அமைக்கப்பட உள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு ஆகியவை இணைந்து உணவு வீதியை சிறப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், உணவு வீதி அமைக்கப்பட உள்ள வ.உ.சி. மைதானம் அருகே உள்ள சாலைகளை பார்வையிட்டார். நிழற்குடை, நடைபாதை, சுத்தமான குடிநீர் வினியோகம் ஆகியவற்றுக்கு அந்த பகுதியில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார்.

தற்போது நடைபாதை கடைகளில் அந்த பகுதியில் உணவு வினியோகம் செய்யப்படுகிறது. இனி மிகவும் சுகாதாரம் முறையில் மட்டுமே அந்த பகுதியில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதுடன், அந்த வீதி மிகவும் சுத்தமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்