மறுமுத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தலின்பேரில் தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள தெருவோர கடைகள், பழக்கடைகள், மீன்கடைகள், கறிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மறுமுத்திரை இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 32 மின்னணு தராசுகள், 9 மேஜை தராசுகள், 9 விட்ட தராசுகள், 32 இரும்பு எடைக்கற்கள், 16 ஊற்றல் அளவைகள் என மொத்தம் 94 எடை அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகளை பயன்பாட்டில் வைத்திருந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த தகவலை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தெரிவித்தார்.