அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.;

Update:2022-12-07 11:01 IST

சென்னை,

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த அவர், கடந்த 3-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்