மருதகுளம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

மருதகுளம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update:2023-08-30 02:34 IST

இட்டமொழி:

மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 120 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். மேலும் 10, 11, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பஞ்சாயத்து தலைவர் மேரி ஜெபன்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னீர்பள்ளம், கோவிலம்மாள்புரம் ஊராட்சி சவளைக்காரன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்