100 பேருக்கு விலையில்லா ஆடுகள்
100 பேருக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.;
திருச்சுழி,
திருச்சுழியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார். விழாவில் அருப்புக்கோட்டைஆர்.டி.ஓ. கல்யாண்குமார் , திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் சந்தனப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கத் தமிழ்வாணன், போஸ் தேவர், கமலி பாரதி, சிவக்குமார் , ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜமாணிக்கம், சிவமாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.