அரவக்குறிச்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு

அரவக்குறிச்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.;

Update:2023-08-10 00:36 IST

அரவக்குறிச்சி நகரப் பகுதிகளில் தற்போது பள்ளிகளில் முதல் பருவ இடைத்தேர்வும், பி.எட் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சியில் மாலை முதல் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்