வள்ளியூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்

வள்ளியூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-10-23 18:45 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்தசஷ்டி திருவிழா

நெல்லை மாவட்டத்தில் பழமை வாய்ந்த குகை கோவிலாக வள்ளியூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம்

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரமாக தாரகன் வதம் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தக்கார் சுரேஷ் கண்ணன், செயல் அலுவலர் ராதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்