விநாயகர் சதுர்த்தி மற்றும் வாரவிடுமுறை...சென்னையில் இருந்து இன்று 650 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.;

Update:2023-09-15 09:04 IST

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்த வார இறுதி நாளான சனிக்கிழமை (16/09/2023) மற்றும் ஞயிற்றுக் கிழமை சுபமுகூர்த்த (17/09/2023) நாட்களை தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 18/09/2023 அன்று திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்