ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.;

Update:2022-08-30 21:57 IST

ஆனைமலை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆனைமலை தாலுகாவை சுற்றியுள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், சின்னப்பம்பாளையம், சுந்தரபுரி போன்ற பகுதிகளில் 100 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதேபோல நெகமம் பகுதியில் பொதுமக்கள் சார்பாக 14 இடங்களிலும், இந்து முன்னணி சார்பில் 30 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலை வைக்கும் இடங்களில், ஊர்வலம் செல்லும் பாதை, உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்