திருவெண்ணெய்நல்லூாில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

திருவெண்ணெய்நல்லூாில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

Update: 2022-09-02 16:55 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,536 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏரி, குளம், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் நேற்று வாகனங்களில் ஊர்வலமாக கடலூருக்கு எடுத்து சென்று, கடலில் கரைக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி கோட்ட தலைவர் முருகையன், மாவட்ட தலைவர் அப்பு என்கிற சதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தை விவேகானந்தர் விதர்சன குழு தலைவர் ராஜா, மனிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்