மத நல்லிணக்க விநாயகர் சிலை ஊர்வலம்

வேதாரண்யம் அருகே நடந்த மத நல்லிணக்க விநாயகர் சிலை ஊர்வலத்தில் மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.

Update: 2023-09-19 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கருப்பம்பலம் காசிவிஸ்வநாத திருசிற்றம்பலம் விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூைஜகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த ஊர்வலத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விநாயகர் ஊர்வலத்தை மும்மதத்தினர் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.விநாயகர் சிலை ஊர்வலம் 5 கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் கரைக்கப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்