நெல்லையில் முன்பகையினால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பெருமாள்புரம் பகுதியில் ஒரு வாலிபரை வழிமறித்து, அச்சுறுத்தி அரிவாளால் தாக்கிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2026-01-10 10:40 IST

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், நம்பிக்கைநகர், மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த பெருமாள்புரம் எம்.எல். பிள்ளைநகரை சேர்ந்த கருப்பசாமி மகன் மாயாண்டி (வயது 25) என்பவருக்கும் நம்பிக்கைநகரை சேர்ந்த பாண்டி மகன் பிரதீப்பாண்டியன்(22) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.

அதன் காரணமாக பிரதீப்பாண்டியன், மாயாண்டியை வழிமறித்து, அச்சுறுத்தி அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிவிட்டார். இதனால் காயமடைந்த மாயாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பாண்டியனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.  

Tags:    

மேலும் செய்திகள்