ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மணல்மேடு அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;
மணல்மேடு:
மணல்மேடு அருகே நடராஜபுரம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் அய்யப்பன் (வயது 27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. கடந்த மாதம் ஒரு வழக்கு தொடர்பாக அய்யப்பன், மணல்மேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, அய்யப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அய்யப்பனை கைது செய்து, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.