ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்தரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update:2023-08-27 02:56 IST


விருத்தாசலம் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 36). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று விருத்தாசலம் முல்லாதோட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் கார்த்தி என்கிற கார்த்திக்கேயன்(30), பாபுவின் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட பாபுவை, கார்த்திக்கேயன் ஆபாசமாக திட்டி, அவரது சட்டை பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டார். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், பட்டாகத்தியால் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கேயனை கைது செய்தனர். ரவுடியான இவர் மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் 9 அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் கார்த்திக்கேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் கார்த்திகேயனை விருத்தாசலம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக்கேயனிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்