கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது;

Update:2022-09-21 00:15 IST

கடையநல்லூர்:

இலத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் இடைகால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்குபுரம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஞானபிரகாசம் என்ற இயேசுராஜன் (வயது 28) சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இயேசுராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்