ஜெனீவா உடன்படிக்கை நாள் உறுதிமொழி ஏற்பு

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் ஜெனீவா உடன்படிக்கை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-08-12 11:40 GMT

காட்பாடி

1949-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஜெனீவா உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவா உடன்படிக்கை நாள் ஆகஸ்டு 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன்படி வேலூர் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பும், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பும் இணைந்து காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஜெனீவா உடன்படிக்கை தின நிகழ்ச்சியை இன்று நடத்தின.

தலைமைஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் எம்.மாரிமுத்து, காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்றார்.

ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஜெனீவா உடன்படிக்கை குறித்து விளக்கி பேசினார்.

அதைத்தொடர்ந்து பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் பள்ளி கவுன்சிலர் செலின் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்