பெரியார் பல்கலைக்கழகத்தில்புவி அமைப்பியல் கண்காட்சி நிறைவு விழா

Update:2023-09-05 02:05 IST

சேலம்

பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை சார்பில் ஜி-20, ஜியோ எக்ஸ்போ-2023 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கண்காட்சி நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடந்த இந்த கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு புவி அமைப்பியல் துறைத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

தேசிய சமூக இலக்கிய பேரவை மாநிலத்தலைவர் தாரை.அ.குமரவேலு கலந்து கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முன்னாள் புவி அமைப்பியல் துறை பேராசிரியர்கள் ஸ்ரீதர், கோவிந்தராஜூ, வரலாற்று சங்க பொதுச்செயலாளர் பர்ணபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்