பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலூர் அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்;

Update:2023-07-08 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் சித்தப்பட்டிணம் கிராமத்தில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் 1098 என்ற பாதுகாப்பு மொபைல் எண்ணின் பயன் மற்றும் அவசியம் குறித்தும், காவல்துறையில் உள்ள செயலி பற்றியும் போலீசார் விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில் சித்தப்பட்டிணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய பெண் ஏட்டு கோகிலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்