எட்டுக்குடிக்கு அரசு பஸ் இயக்கம்

எட்டுக்குடிக்கு அரசு பஸ் இயக்கம்;

Update:2022-06-04 19:39 IST

கூத்தாநல்லூர்:

மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், சேந்தங்குடி, திருநெல்லிக்காவல், நால்ரோடு, சூரமங்கலம், சினையன்குடி, கூத்தன்பட்டு, கொளப்பாடு, திருக்குவளை ஆகிய ஊர்களை கடந்து எட்டுக்குடி வரை செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், புதிதாக வடபாதிமங்கலம் வழித்தடத்தில் எட்டுக்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், எட்டுக்குடி முருகன் கோவில், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் செல்வோர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி செல்வோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்