அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்படைக்கப்பட்ட விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கும் போது அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தாலுகா அலுவலகங்கள் 5 யூனியன் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 அலுவலகங்கள் உள்பட மொத்தம் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.