பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் புகுந்த உடும்பு பிடிபட்டது

பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் புகுந்த உடும்பு பிடிபட்டது

Update: 2022-11-09 18:45 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 11 மணியளவில் சுமார் 3 அடி நீளம் உள்ள உடும்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நாமக்கல் வன அலுவலர் உத்தரவின்பேரில் எருமப்பட்டி வனவர் அருண்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் சார்லஸ், யுக்னேஷ், சுப்பிரமணி, காளிமுத்து ஆகியோர் பள்ளிக்கு சென்று உடும்பை உயிருடன் பிடித்து கொல்லிமலை அடிவாரத்துக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளியில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்