யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

தேசத்திற்கான சேவையில் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தினார்.

Update: 2024-05-17 15:44 GMT

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ்பவனில் இன்று நடைபெற்ற விழாவில், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2023 மற்றும் இந்திய வனப்பணிகள் தேர்வு 2023 ஆகியவற்றில் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்றவர்களை பாராட்டினார்.

வெற்றியாளர்களுடனான தனது உரையாடலின் போது, தேசத்திற்கான அவர்களின் சேவையில் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கவர்னர் ரவி அறிவுறுத்தினார். ஆளுமையின் அம்சங்களான உடல், அறிவாற்றல் மற்றும் ஆன்மிக உணர்வை நன்கு பேணுமாறும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் நன்றியுணர்வு மற்றும் பரிவுடனும் விளங்கி முன்மாதிரியாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.


Tags:    

மேலும் செய்திகள்