கிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - புவியியல் மற்றும் சுரங்கத்துறை தகவல்

கிரானைட் குவாரிகள் இயங்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-01-12 17:22 GMT

சென்னை,

2018 முதல் கிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கிடப்பில் உள்ள சுரங்க திட்ட அனுமதி குறித்த விவரங்களை உடனடியாக தலைமையகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளார். குவாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் குவாரிகளின் செயல்பாடுகள் மேம்பட காலதாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 873 கிரானைட் குவாரிகளில் 774 குவாரிகள் இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர், 2018 முதல் கிரானைட் குவாரிகள் இயங்காததால் அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலை அடுத்து அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்