அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்

நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-31 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை நெல் சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சுமார் 16ஆயிரத்து500 ஏக்கரில் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்து வருகின்றனர். முன் கூட்டியே கோடை சாகுபடி செய்த நெற்பயிர்கள் தற்போது முதிர்ந்து பழுத்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பல்வேறு இடங்களில் எந்திரம் மூலம் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் அறுவடை செய்த நெல் மணிகள் காளாச்சேரி, முன்னாவல்கோட்டை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

விவசாயிகள் எப்போது நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என காத்துள்ளனர். தற்போது பல இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. நெல் மணிகள் மழையில் நனைந்து விட்டால் கொள்முதல் செய்யப்படுமா? என்ற கவலையுடன் விவசாயிகள் உள்ளனர்.

எனவே மழை தொடங்கும் முன் நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் மணிகளை பாதுகாத்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்