புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2023-09-21 00:15 IST

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தொண்டியார் வீதியில் பேவர் பிளாக் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அஜீஸ்கான், தேவகோட்ைட.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி கழுங்குப்பட்டி நாராயணன் தெருவில் குடிதண்ணீர் குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், மடப்புரம்.

சாலையில் திரியும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தெருநாய்கள் மற்றும் கால்நடைகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்புவனம்.

வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமம் பஸ் நிலையம் அருகில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மறவமங்கலம், பொதுமக்கள்.

ஆபத்தான மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வண்டல் நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலே செல்லும் மின் கம்பி மழைக்காலங்களில் அறுந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சம் அடைகின்றனர். அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பதாக ஆபத்தான மின்கம்பம், மின்கம்பிகளை அகற்றுவார்களா?

சரவணன், திருப்புவனம்.  

Tags:    

மேலும் செய்திகள்