திருப்பூரில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணமலை கைது
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கொட்ட, கோர்ட் அனுமதி வழங்கியது.
குப்பையை பிரித்து கொட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குப்பையை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூரில் மாநகரட்சியை கண்டித்து ஒரு மாதமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அண்ணாமலை பங்கேற்றார். இதையடுத்து, அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.