கோவில் பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்

அருப்புக்கோட்டையில் கோவில் பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.;

Update:2022-07-31 00:15 IST

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்றது. இதில் விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தனர். இதில் விருதுநகர் மாவட்ட இலாகா ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்