முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்க முப்பெரும் விழா

தியாகதுருகத்தில் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்க முப்பெரும் விழா நடந்தது.

Update: 2022-09-20 18:45 GMT

தியாகதுருகம், 

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா தியாகதுருகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் காமராஜ், நகர தலைவர் லிங்கப்பன், நகர செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். இதில் தியாகதுருகம் நகர தி.மு.க. செயலாளர் மலையரசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆதி மருத்துவர் சிவா பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் முடி நீக்கும் தொழிலாளர்களையும் நாதஸ்வரம், தவில், இசைக்கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கிராமப்புற முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 60 வயதை கடந்த மருத்துவ சமூக மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் மேல தாளங்களுடன் பேரணியாக வந்தனர். இந்த பேரணியை தி.மு.க. நகர செயலாளர் மலையரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுரேஷ், சேகர், செந்தில், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்