மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனியில், மனநல காப்பகம் திறக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-07-20 18:29 IST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயில் ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நூருல்ஹுதா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பழனி அடிவாரம், பஸ்நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் குற்ற செயல்கள் நடக்கிறது. எனவே பழனியில் மனநல காப்பகம் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்