பதவி உயர்வு வழங்காததை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு வழங்காததை கண்டித்து தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-09 23:51 IST

கடந்த 45 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காததை கண்டித்தும், பணி விதிகளில் முரண்பாடுகளை களைய வேண்டியும் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்