சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி உஷா ராணி(வயது 55). அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் உஷா ராணி நேற்று முன்தினம் மாலையில் சிவசக்தி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென உஷா ராணி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் உஷா ராணிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.