அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய மனுக்கள் மீது இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-14 02:21 GMT

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம்காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில், பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையீடு செய்தார்.

அதையடுத்து நீதிபதி, அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு என்பதால், இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார். இதற்கிடையில், இந்த வழக்குகள் இன்று (ஜூலை 14) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்