தரகம்பட்டி பகுதியில் கனமழை

தரகம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது.;

Update:2023-09-30 23:04 IST

தரகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. மாலை 3 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் அரைமணி நேரம் வரை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. இந்த மழையால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்