அதிக கட்டணம்: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!

அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-11-09 09:21 GMT

சென்னை,

கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவத் துறைச் செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக முதல் முறையாக கல்விக் கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு பெற்று வருகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. இதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை இளநிலை மாணவர்கள் ddugselcom@gmail.com, முதுநிலை மாணவர்கள் ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

கட்டண விவரங்கள் tnmedicalselection.net என்ற இணையத முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்