தூய பவுல் ஆலய தேர்பவனி

தூய பவுல் ஆலய தேர்பவனி

Update: 2023-07-01 22:34 GMT


மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின்நகர் தூய பவுல் ஆலயத்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி நடந்தது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டு, திருவிழா சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, தூய பவுல் திரு உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலியும், குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையில் பங்கு பேரவையினர், அன்பிய மண்டலங்களைச் சேர்ந்தவர்கள், இருபால் துறவியர்கள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்