பொள்ளாச்சியில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

பொள்ளாச்சியில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

Update: 2023-09-29 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பிரைடு அரிமா சங்கம், கோவை ஒமேகா இவெண்ட்ஸ் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி பல்லடம் ரோடு கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் தொடங்கியது. கண்காட்சியை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி பிரைடு அரிமா சங்க தலைவர் ரமேஷ், பி.என்.ஐ. தலைவர் ஹித்தேஷ் படேல், அரிமா சங்க துணை நிலை ஆளுனர் ராஜசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். கண்காட்சியில் 30 அடி உயர ரோபோ டைனோசர் சிலை, வீட்டு உபயோக பொருட்கள் அரங்கு, வாகன அரங்குகள் உள்பட பல்வேறு அரங்குகள் உள்ளன. முகாமில் இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவசமாக மெகந்தி, டாட் டூ, பலூன் வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி வாழ்க்கை புகைப்பட கண்காட்சி இடம் பெற்று உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கையெழுத்து, ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்படுகிறது. உணவு திருவிழாவும் நடக்கிறது. கண்காட்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9 மணி வரை நடக்கிறது. கண்காட்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒமேகா இவெண்ட்ஸ் நிறுவனர் வெங்கடேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்