தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள்: உரிய நடவக்கை எடுக்கப்படும்... சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உறுதி

சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.

Update: 2023-03-23 05:15 GMT

சென்னை,

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கூறும்போது, கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞர் கொலையில் அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கினைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்கவேண்டும். இவ்வாறு முதல் அமைச்சர் பதிலளித்தார்.

இளைஞர் கொலை வழக்கில் அதிமுக கிளைச்செயலாளர் சங்கருக்கு தொடர்பு என முதல் அமைச்சர் கூறியதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமளியில் ஈடுபட்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்