ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டி கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டி கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

Update: 2022-10-13 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே உள்ள கதிரேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர்களுக்கு ஜீவன் (13), பவன் குமார் (9) மற்றும் சாய் தர்ஷன் என்ற 11 மாத கைக்குழந்தை ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வெங்கடேசப்பா, ரேணுகா, தனது தாய் சின்னம்மா மற்றும் 3 மகன்களுடன் கதிரேப்பள்ளி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட சென்றனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்தது. இதனால் அருகில் இருந்த ஒரு மரத்தில் இருந்து தேனீக்கள் கலைந்து கூட்டம், கூட்டமாக வெங்கடேசப்பா உள்ளிட்ட அனைவரையும் கொட்டியது.

இதில் வெங்கடேசப்பா உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ரப ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்