பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்பழங்குடியினர் மாணவிகள் விடுதி சிறப்பு

Update: 2023-10-01 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் சித்தேரி, வத்தல்மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் 100 பழங்குடியின மாணவிகள் தங்கி பயில்வதற்கு புதிய அரசு பழங்குடியினர் மாணவிகள் விடுதியை அரசு தொடங்கியது. இதனை தனியார் வாடகை கட்டிடத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் திறந்து வைத்தார். இந்த மாணவியர் விடுதியில் தற்போது 50 மாணவிகள் சேர்ந்துள்ளனர் இன்னும் கூடுதலாக 50 மாணவிகள் விடுதியில் சேர்ந்து தங்கி படிக்க வசதி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் மில்லர், மாணவிகள் விடுதி காப்பாளர் சரவண பிரியா, கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்