படப்பை அருகே ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன், மனைவி கைது

படப்பை அருகே ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-10 11:16 GMT

ஏலச்சீட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி செல்வி (வயது 35). இவர் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் படப்பை ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அவருடைய மனைவி மனோசித்ரா ( 36) இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் செல்வி

தனது தோழிகளுடன் சேர்ந்து சீட்டுப்பணம் கட்டியதாகவும் சீட்டு முடிந்தும் பணம் தராமல் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை இழுத்தடிப்பதாகவும் சீட்டுப்பணத்தை கேட்க சென்றபோது தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கைது

புகாரை பெற்ற மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கராஜ், மனோசித்ராவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஏலச்சீட்டு நடத்தி பணம் தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி கூறுகையில் இதுபோல ஏல சீட்டு நடத்தி அப்பாவி பொது மக்களை ஏமாற்றுபவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்