நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-04 15:00 IST

நடத்தையில் சந்தேகம்

சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 39). இவருடைய மனைவி ரேணுகா (32). பாஸ்கருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் ரேணுகா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால் அவரது நடத்தையிலும் சந்தேகம் அடைந்து, அவரை அடித்து உதைத்து வந்ததாக தெரிகிறது.

கத்தியால் குத்தினார்

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ரேணுகாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ரேணுகா, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் ரேணுகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திய பாஸ்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்