நேற்று வரை பழனிசாமியை துரோகி என்று சொன்னவர் தினகரன் - செல்வப்பெருந்தகை பேட்டி
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.;
சென்னை,
இன்று சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இயற்கைக்கு முரணான கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கும் அமமுகவின் தலைவர், நேற்று வரை துரோகி என்றும் உலகத்திலே பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட துரோக பட்டத்தை உலகமே கண்டிருக்காது என எடப்பாடியை பேசி இருக்கிறார்.
ஆகவே இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.