அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் உடனடி நடவடிக்கை: தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு

அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-22 12:29 GMT

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியின் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ நகைகள் கடந்த 13-ந்தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு தலைமையிலான தனிப்படை போலீசார் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் 7 பேரையும் விரைந்து கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் கூடுதல் கமிஷனர் அன்பு மற்றும் அவருடைய தனிப்படையில் இடம் பெற்ற இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர்கள் விஜயகுமார்(அண்ணாநகர்), ராஜாராம்(கொளத்தூர்), குமார்(கோயம்பேடு), உதவி கமிஷனர்கள் அருள் சந்தோஷமுத்து(அரும்பாக்கம்), ரவிச்சந்திரன்(அண்ணாநகர்).

மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன்(அரும்பாக்கம் குற்றப்பிரிவு), பிரபு (சட்டம்-ஒழுங்கு), கோபாலகுரு(அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு), பூபாலன்(சூளைமேடு சட்டம்-ஒழுங்கு), அரும்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்மல்ராஜ், பன்னீர்செல்வம், அண்ணாநகர் சப்-இன்ஸ்பெக்டர் பெனாசீர் பேகம், போலீஸ்காரர்கள் குழந்தைவேல், பிரித்விராஜ், சாலமோன்ராஜ், முகமது சலாவுதீன், மணிகண்ட ஐயப்பன் ஆகியோரை நேரில் வரவழைத்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனிருந்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்