டி.ெபாம்மிநாயக்கன்பட்டியில்அரசு பள்ளி ஆண்டு விழா

ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update:2023-04-16 00:15 IST

ஆண்டிப்பட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 98-வது ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி நடந்தது. மேலும் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினர். விழாவில் திம்மரச நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்