தர்மபுரியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் உடும்பு சிக்கியது

தர்மபுரியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் உடும்பு சிக்கியது.;

Update:2023-06-03 00:15 IST

தர்மபுரி:

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்பகுதியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தின் வெளிப்பகுதியில் நேற்று ஒரு உடும்பு புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த உடும்பை உயிருடன் பிடித்து தொப்பூர் காப்புக்காட்டு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்