கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்பவர் வடகரை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-23 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே சாம்பவர்வடகரை நகர பஞ்சாயத்தில் மாதாந்திர கூட்டம் செயல் அலுவலர் காயத்ரி தலைமையில் நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் சீதாலட்சுமி முத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் செயல் அலுவலர், நகர பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

இந்த நிலையில் 8-வது வார்டு கவுன்சிலர் சுடலை முத்து, 9-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி ராஜேந்திரன், 11-வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன், 14-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி கண்ணன், 15-வது வார்டு கவுன்சிலர் ரபீக் ராஜா ஆகியோர் கூட்டம் முடிந்த பின்பும் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, சாம்பவர் வடகரை நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செயல் அலுவலர் நேரத்திற்கு வருவதில்லை. அதனால் மக்கள் பணி பாதிக்கப்படுகிறது. வெளிப்படையான நிர்வாகம் இல்லை. கூட்டத்தின்போது மினிட் நோட் வழங்கவில்லை, என்றனர்.

இதுகுறித்து செயல் அலுவலரிடம் கேட்டபோது, நகர பஞ்சாயத்தில் வெளிப்படையான முறையில் நிர்வாகம் நடக்கிறது. நகர பஞ்சாயத்து கவுன்சிலர்களுக்கு தமிழில் கூட்டம் குறித்த அறிவிப்பு மற்றும் அஜெண்டா முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டவர்களுக்கு மட்டும் மினிட் நோட் காட்டப்படும். 8 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, என்றார்.

மேலும் பிப்ரவரி மாதத்தில் பொது சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு போன்ற பராமரிப்பு பணிகள் அனைத்திற்கும் முறையாக செலவு கணக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கவுன்சிலர்களிடம் அவர் விளக்கம் அளித்தார். அதன்பின்பு கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்